நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் உள்பட 64 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மின்வாரிய உதவி பொறியாளர் உள்பட 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,151 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 9,083 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,087 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே நேற்று தண்ணீர்பந்தல்பாளையம் அரசு பள்ளி ஆசிரியை, பரமத்திவேலூர் மின்வாரிய உதவி பொறியாளர் உள்பட 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. வழக்கம்போல் நேற்றும் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.
பாதிப்பு எண்ணிக்கை 9,151 ஆக உயர்வு
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,151 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 144 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 8,524 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 95 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 532 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story