நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2020 8:04 AM IST (Updated: 3 Nov 2020 8:04 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஞ்சீபுரம், 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். கொள்முதல் செய்யும் நெல் ஈரப்பதம் 17 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தி கொள்முதல் செய்திட வேண்டும், கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளை அனுமதிக்கக்கூடாது, கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள், வருவாய் துறை வேளாண்மைத்துறை கொண்ட குழு முறையாக செயல்பட வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். விவசாயிகளை கட்டாயப்படுத்தி மூட்டைக்கு ரூ.40 முதல் 70 வரை பணம் வசூல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.நேரு, மாவட்ட துணைச் செயலாளர் டி.லிங்கநாதன், எம்.ஆறுமுகம், வி.சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story