மனைவியுடன் கள்ளத்தொடர்பு - வாலிபர் அடித்துக்கொலை


மனைவியுடன் கள்ளத்தொடர்பு - வாலிபர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 9 Nov 2020 1:45 AM IST (Updated: 5 Nov 2020 4:07 AM IST)
t-max-icont-min-icon

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம்,

பெரிய காஞ்சீபுரம் ஜவகர்லால் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 35), கார் டிரைவர். இவரது மனைவி காமாட்சி. 2 மகன்கள் உள்ளனர். காமாட்சி, காரை பகுதியை சேர்ந்த தினேஷ் (27) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. பலமுறை இது குறித்து ரவிச்சந்திரன் கண்டித்துள்ள நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காமாட்சி, தினேஷ் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அதன்பின் காரை கிராமத்திற்கு இருவரும் திரும்பினர்.

நேற்று முன்தினம் பணி முடிந்து ரவிச்சந்திரன் வீடு திரும்பியபோது தினேஷ், காமாட்சியுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தார். ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் அருகில் இருந்த கட்டையால் தினேஷை பலமாக அடித்தார். இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனடியாக ரவிச்சந்திரன் பொக்லைன் எந்திரத்தில் தினேஷ் உடலை எடுத்துக்கொண்டு சிறுவாக்கம் ஏரிக்கரையில் பள்ளம் தோண்டி புதைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ரவிச்சந்திரன் சரண் அடைந்தார்.

காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர்சாமி வழக்குப்பதிவு செய்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை, தாசில்தார் பவானி ஆகியோர் முன்னிலையில் சிறுவாக்கம் கிராம ஏரிக்கரையில் புதைக்கப்பட்ட இடத்தில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story