கரூர் மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில் புதிதாக 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர்,
உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய கொரோனா தொற்று கரூர் மாவட்ட மக்களையும் பெரும் அச்சமடைய செய்துள்ளது. கடந்த காலங்களில் ஒரு நாளைக்கு 40-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது. கடந்த வாரத்தில் 10-க்கும் குறைவான எண்ணிக்கையில் பாதிப்பு இருந்தது. இந்தநிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பசுபதிபாளையத்தை சேர்ந்த 29 வயது பெண், மண்மங்கலத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி, புதுப்பட்டியை சேர்ந்த 59 வயது ஆண், காந்திகிராமத்தை சேர்ந்த 38 வயது பெண்.
19 பேருக்கு தொற்று
வெங்கமேட்டை சேர்ந்த 34 வயது பெண், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 51 வயது பெண் மற்றும் 49 வயது ஆண், காமராஜபுரத்தை சேர்ந்த 58 வயது பெண், 31 வயது ஆண், பள்ளப்பட்டியை சேர்ந்த 54 வயது ஆண், சின்னாண்டாங்கோவிலை சேர்ந்த 33 வயது பெண், தென்னிலையை சேர்ந்த 31 வயது ஆண் உள்பட 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story