நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,320 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,320 ஆக உயர்வு
x
தினத்தந்தி 5 Nov 2020 10:50 AM IST (Updated: 5 Nov 2020 10:50 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,320 ஆக உயர்ந்து உள்ளது.

நாமக்கல், 

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 9,267 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரின் பெயர் அந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,266 ஆக குறைந்தது.

இதற்கிடையே நேற்று 13 வயது சிறுவன் உள்பட 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. வழக்கம்போல் நேற்றும் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் இருந்தது.

பாதிப்பு எண்ணிக்கை 9,320 ஆக உயர்வு

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,320 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 86 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 8,777 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 96 பேர் பலியான நிலையில், 447 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story