திருச்சியில் 7 மாதங்களுக்கு பின் அரசு ஆஸ்பத்திரியில் காலியான கொரோனா சிகிச்சை வார்டுகள்


திருச்சியில் 7 மாதங்களுக்கு பின் அரசு ஆஸ்பத்திரியில் காலியான கொரோனா சிகிச்சை வார்டுகள்
x
தினத்தந்தி 6 Nov 2020 6:48 AM IST (Updated: 6 Nov 2020 6:48 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 7 மாதங்களுக்கு பின், அரசு ஆஸ் பத்திரியில் கொரோனா சிகிச்சை வார்டுகள் காலியாகி வருகின்றன. காஜாமலை சிறப்பு மையம் மூடப்பட்டது.

திருச்சி, 

உலகையே ஆட்டிப் படைத்து வந்த கொரோனா வின் கோரத்தாண்டவத்திற்கு பல உயிர்கள் காவு வாங்கப்பட்டன. இந்தியாவில் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் டாக் டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டவர்களின் பட்டியலை அடுக்கி கொண்டே போக லாம். இதில் கொரோனாவுக்கு பலர் பலியாகி உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடக்கத்தில் வெளிநாடுக ளில் இருந்து வந்தவர்கள் மட்டுமே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் உள்ளூர் மக்களும் பாதிக்க தொடங்கினார்கள்.

குறைய தொடங்கியது

குறிப்பாக கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தன. அதிக பட்சமாக ஒரே நாளில் 250 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. தொடர்ந்து டாக் டர்கள், சுகாதார அலுவலர்கள் ஓய்வின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தனர்.

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொற்றாளர்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்திலும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு மற்றும் தீவிர தடுப்பு நட வடிக்கையும் அதற்கு கார ணமாகும். இதில் திருச்சி மாவட்டத்தில், தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்து தினமும் 50 நபர்கள் என கட்டுக்குள் வந்து விட்டது.

169 பேர் பலி

இதனால், டாக்டர்கள், சுகாதாரக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் தரப்பில் பெருமூச்சு விட்டு வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 169 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

அதே நேரம் 12,192 பேர் இதுவரை பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 332 பேர் அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரி மற்றும் வீட்டு கண்காணிப்பில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

காலியாகி வரும் வார்டுகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால் திருச்சி அரசு ஆஸ்பத்திரியின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டுகள் செயல்பட்ட 4, 5, 6 ஆகிய தளங்கள் கொரோனா நோயாளிகள் இன்றி காலியாகி உள்ளன. சிறப்பு வார்டுகளில் இதுவரை பணியாற்றி வந்த டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் தங்களது துறை சார்ந்த பணிக்கு திரும்பினார்கள்.

இதுபோல திருச்சி காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா நோயாளி களுக்கான சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது. தற்போது அங்கு கொரோனா நோயாளிகள் வீடு திரும்பி விட்டதால், கடந்த 7 மாதங்களாக பரபரப்பாக இயங்கி வந்த கொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டு விட்டது.

முக கவசம் கட்டாயம்

அதே வேளையில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தாலும் பொதுமக்கள் இன்னமும் சிறிது காலம் முக கவசம் அணிவதையும், தனி மனித இடைவெளியையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அடிக்கடி கிருமிநாசினியால் கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் டாக்டர்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story