கடலூர், பண்ருட்டியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாள் விழா


கடலூர், பண்ருட்டியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 8 Nov 2020 10:29 AM IST (Updated: 8 Nov 2020 10:29 AM IST)
t-max-icont-min-icon

கடலூர், பண்ருட்டியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

கடலூர்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் கடலூர் வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.எம்.கே. முகமது ரபீக் தலைமை தாங்கினார். கடலூர் வடமேற்கு மாவட்ட செயலாளர் சரவணன், தென்மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகர செயலாளர் ராமு ஏற்பாட்டின் பேரில், கடலூர் முதுநகரில் மரக்கன்று நடுதல், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல், முதியோர் இல்லத்துக்கு உணவு, அரசு மருத்துவமனையில் ரத்ததானம் ஆகியவற்றை கடலூர் ஒன்றிய செயலாளர் பாபு, நகர நிர்வாகி அபுபக்கர், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் சாத்திப்பட்டு வடிவேல் ஆகியோர் வழங்கினர். விழாவில் நகர செயலாளர் அருளரசு, மாவட்ட இளைஞரணி வேல்முருகன், மாவட்ட துணை செயலாளர் பரணிதரன், நகர நிர்வாகிகள் ஜெயபால், சுந்தர், பாடலி, மகளிரணி இந்துமதி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பண்ருட்டியில் நகர செயலாளர் முத்து தலைமையில் மரக்கன்று நட்டனர். தொடர்ந்து முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கிய அவர்கள், பண்ருட்டி பஸ் நிலையத்தில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் நந்தகுமார், தணிகை நாதன், சுந்தர், குமார், காமில், ராமலிங்கம், பாபு, சிவா, அண்ணாகிராமம் ஒன்றியம் வடிவேலு, சுரேந்தர், மகளிரணி நூர் நிஷா, கடலூர் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், மைக்கேல், சுந்தரி, மீனா, ராஜேஸ்வரி, எழில், வசந்த், ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story