நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியை உள்பட 57 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,469 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரசு பள்ளி ஆசிரியை உள்பட 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,469ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 9,410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,412 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று சேந்தமங்கலம் போலீஸ் ஏட்டு, ஆயுதப்படை போலீஸ்காரர், அரசுபஸ் டிரைவர், பேளுக்குறிச்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், நல்லியம்பாளையம் அரசு பள்ளி ஆசிரியை உள்பட 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. வழக்கம்போல் நேற்றும் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பள்ளிபாளையம் பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.
பாதிப்பு எண்ணிக்கை 9,469 ஆக உயர்வு
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,469 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 34 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 8,958 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 96 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 415 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story