நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 36,572 பேர் குணமடைந்தனர்


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 36,572 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 11 Nov 2020 4:38 AM IST (Updated: 11 Nov 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 36 ஆயிரத்து 572 பேர் குணமடைந்து உள்ளனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதியில் 8 பேரும், பாளையங்கோட்டை புறநகர், அம்பை பகுதிகளில் தலா 2 பேரும், மானூர், பாப்பாக்குடி, வள்ளியூர் பகுதிகளில் தலா 3 பேரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது. இதில் 14 ஆயிரத்து 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 255 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 75 வயது முதியவர் ஒருவர் இறந்தார். இதுவரை 210 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தென்காசி-தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 901 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7 ஆயிரத்து 677 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 69 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 155 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 375 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 14 ஆயிரத்து 885 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 133 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

36,572 பேர் குணமடைந்தனர்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 36 ஆயிரத்து 572 பேர் குணமடைந்து உள்ளனர். 681 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story