நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம் கலெக்டர் தகவல்


நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 Nov 2020 11:38 PM IST (Updated: 11 Nov 2020 11:38 PM IST)
t-max-icont-min-icon

நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

விவசாயிகளுக்கு இயற்கையால் எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி, அவர்களை பாதுகாக்கும் பொருட்டு, பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு சிறப்பு பருவமாக நெல்லை மாவட்டத்தில் நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் பிசான பருவ நெல் பயிருக்கு 320 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளன.

கடன் பெறும் விவசாயிகள் அந்தந்த வங்கிகளில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களை பயன்படுத்தி பதிவு செய்யலாம். நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு பிரீமியம் செலுத்த அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி கடைசி நாள் ஆகும். நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.444 பிரீமியம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு கட்டணத்தை கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் மற்றும் சிட்டா, பட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து செலுத்த வேண்டும்.

கட்டணத்தை செலுத்திய பிறகு அதற்கான ரசீது பெற்றுக் கொள்ளவும். இந்த திட்டம் தொடர்பான விவரங்கள் ஏதாவது தேவைப்பட்டால் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story