பீகார் தேர்தல் முடிவு சொல்லும் சேதி விவேகம் உள்ளவர்களுக்கு புரியும் சிவசேனா மீது பா.ஜனதா தாக்கு
பீகார் தேர்தல் முடிவு சொல்லும் சேதி விவேகம் உள்ளவர்களுக்கு புரியும் என சிவசேனாவை பா.ஜனதா தாக்கி உள்ளது.
மும்பை,
பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் பீகார் மாநில தேர்தல் முடிவு சொல்லும் சேதி விவேகம் உள்ளவர்களுக்கு புரியும் என சிவசேனாவை தாக்கும் வகையில் முன்னாள் மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஆஷிஸ் செலார் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- காங்கிரசுடன் கைகோர்த்த காட்டாட்சியின் இளவரசரை பீகார் மக்கள் புறக்கணித்து உள்ளனர். அதேபோல காடுகளின் மீது அதிக அன்பு வைத்திருப்பது போல காட்டிக்கொள்ளும் மராட்டிய இளவரசரும் ஊழல் காங்கிரசுடன் இணைந்து உள்ளார். பீகார் தேர்தல் முடிவு சொல்லும் செய்தியை விவேகம் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
விமர்சனம்
இதேபோல அவர் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசையும் விமர்சித்து உள்ளார். அதில் தேசியவாத காங்கிரசின் காலமும், நகர்வும் உங்களுக்கு ஒரு போதும் தெரியாது என்றார்.
இதேபோல சிவசேனாவுடன் கூட்டணி வைத்தற்கு பீகாரில் காங்கிரஸ் மிகப்பெரிய விலையை கொடுத்து உள்ளது எனவும் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story