மும்பையில் தியேட்டர் வாியை உயர்த்த மாநகராட்சி திட்டம்


மும்பையில் தியேட்டர் வாியை உயர்த்த மாநகராட்சி திட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2020 9:14 PM GMT (Updated: 11 Nov 2020 9:14 PM GMT)

மும்பையில் தியேட்டர் வரியை உயர்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மும்பை, 

மும்பையில் உள்ள தியேட்டர்களில் திரையிடப்படும் படக்காட்சிகளுக்கு மாநகராட்சி வாி வசூல் செய்து வருகிறது. இதில் சாதாரண தியேட்டரில் ஒரு காட்சிக்கு ரூ.50-ம், ஏ.சி. தியேட்டரில் ஒரு காட்சிக்கு ரூ.66-ம், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் காட்சிக்கு ரூ.66-ம் வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரியை உயர்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதன்படி சாதாரண தியேட்டரில் காட்சிக்கு ரூ.150, ஏ.சி. தியேட்டரில் ரூ.200, மல்டிபிளக்சில் ரூ.1000-த்தையும் வரியாக வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

இசை நிகழ்ச்சிக்கு ரூ.10 ஆயிரம்

இதேபோல தியேட்டர்கள், அரங்கங்களில் நடக்கும் இசை நிகழ்ச்சி, சர்க்கஸ், உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டு வரும் வரியும் உயர்த்தப்பட உள்ளது. இதில் தேசிய, சர்வதேச அளவிலான இசை நிகழச்சி நடத்த ரூ.10 ஆயிரமும் (தற்போதைய வரி ரூ.33), சர்க்கஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு காட்சிக்கு ரூ.100-ஐ (ரூ.55) வரியாக வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்த வரி உயர்வு மாநகராட்சி நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிலைக்குழு ஒப்புதல் அளித்தால் பின்னர் இந்த திட்டம் மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Next Story