மராட்டியத்தில் புதிதாக 4 ஆயிரத்து 907 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் புதிதாக 4 ஆயிரத்து 907 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 4 ஆயிரத்து 907 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 17 லட்சத்து 31 ஆயிரத்து 833 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 9 ஆயிரத்து 164 பேர் குணமடைந்தனர். இதுவரை மாநிலம் முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 255 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலத்தில் 88 ஆயிரத்து 70 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
125 பேர் பலி
இதேபோல மாநிலத்தில் புதிதாக 125 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 45 ஆயிரத்து 560 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.
மராட்டியத்தில் மொத்தம் 96 லட்சத்து 328 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story