கொரோனாவிடம் இருந்து பாதுகாத்து கொள்ள தீபாவளி வாழ்த்துகளை சமூக வலைதளம் மூலமாக பெறுங்கள்


கொரோனாவிடம் இருந்து பாதுகாத்து கொள்ள தீபாவளி வாழ்த்துகளை சமூக வலைதளம் மூலமாக பெறுங்கள்
x
தினத்தந்தி 12 Nov 2020 2:55 AM IST (Updated: 12 Nov 2020 2:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க தீபாவளி வாழ்த்துகளை சமூக வலைதளம் மூலமாக பெறுங்கள் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பை, 

கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் மராட்டியத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. நாட்டிலேயே மராட்டியத்தில் தான் அதிகமானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் சமீபநாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்த வார இறுதியில் தீபாவளி பண்டிகை வருகிறது. அந்த சமயத்தில் மக்கள் அதிகம் வெளியே புழங்க வாய்ப்புள்ளதால் கொரோனா இரண்டாவது அலை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி கொள்ள வேண்டும்

நான் இந்த முறை தீபாவளி வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும் மட்டுமே பெற்றுக்கொள்ள உள்ளேன். இதைபோல அனைவரும் செயல்படுங்கள். கொரோனாவிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும் நம் அருகில் உள்ள மற்றும் அன்பானவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும்.

மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட கொரோனா வீரர்கள் நம்மை நோய் பாதிப்பில் இருந்து காப்பாற்ற கடுமையாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு நாம் மேலும் சுமையை அளித்துவிடக்கூடாது.

தீபாவளி முடிந்ததும் கல்லூரி மற்றும் பள்ளிகளை திறக்க உள்ளோம். எனவே நாம் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்கவேண்டும். முககவசம் அணியவேண்டும். கைகளை நன்றாக கழுவவேண்டும். தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவேண்டும்.

மூத்த குடிமக்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு முதல்-மந்திரி கூறியுள்ளார்.


Next Story