கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட டி.வி. சேனல் ஆசிரியருக்கு இடைக்கால ஜாமீன் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட டி.வி. சேனல் ஆசிரியருக்கு இடைக்கால ஜாமீன் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Nov 2020 9:34 PM GMT (Updated: 11 Nov 2020 9:34 PM GMT)

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட டி.வி. சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை, 

ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரிபப்ளிக் ஆங்கில டி.வி. சேனல் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கடந்த 4-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்க மும்பை ஐகோர்ட்டு மறுத்து இருந்தது.

இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், இந்திரா பானார்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

இடைக்கால ஜாமீன்

அப்போது நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறுகையில், “அவரது (அர்னாப்) கொள்கை என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நானே அவரது சேனலை பார்க்கமாட்டேன். ஆனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடவில்லை எனில் நாம் அழிவின் பாதையில் செல்வதாக அர்த்தம். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அர்னாபின் தனிநபர் சுதந்திரத்தை மறுக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Next Story