மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்து உள்ளார்.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.10 கட்டணமாக செலுத்தி அருகில் உள்ள இ-சேவை மையங்களில் மாற்றுத்திறனாளி ஓய்வூதிய திட்ட மனுவினை பதிவு செய்யலாம்.
இயலாமையின் அளவு 40 சதவீதத்திற்கு மேல் இருத்தல் வேண்டும். அரசு பணியில் இருத்தல் கூடாது. தனியார் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் நிரந்தரமாக பணிபுரிவோர் மற்றும் சுயதொழில் செய்வோர் வருமானம் வருடத்திற்கு ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தாலுகா அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட பிரிவின் மூலம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மூலம் உதவித்தொகை பெறுபவராக இருத்தல் கூடாது.
ஆவணங்கள்
மேற்கண்ட விவரங்களுக்கு உட்பட்ட வயது வரம்பின்றி அனைத்து மாற்றுத்திறனாளிகளும் உரிய ஆவணங்களுடன் (புகைப்படத்துடன் கூடிய மனு, ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, வங்கி புத்தக நகல், தொலைபேசி எண்) விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story