திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.67 கோடி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.1.67 கோடி ஆகும்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். கோவிலில் இந்த மாதம் (நவம்பர்) பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை முதலாவது முறையாக எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனரும், தக்கார் பிரதிநிதியுமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், தூத்துக்குடி உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, அலுவலக கண்காணிப்பாளர் சீதாலட்சுமி, கோவில் ஆய்வாளர்கள் முருகன், சிவலோகநாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகாசி பதினெண்சித்தர் மடம் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.1 கோடியே 67 லட்சம்
இதில் கோவில் நிரந்தர உண்டியலில் ரூ.1 கோடியே 66 லட்சத்து 76 ஆயிரத்து 458-ம், கோசாலை உண்டியலில் ரூ.69 ஆயிரத்து 506-ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.16 ஆயிரத்து 594-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 67 லட்சத்து 62 ஆயிரத்து 558-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர்.
மேலும் ஒரு கிலோ 550 கிராம் தங்கமும், 12 கிலோ 608 கிராம் வெள்ளிப்பொருட்களையும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 70 வெளிநாட்டு பண நோட்டுகளும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
Related Tags :
Next Story