மராட்டியத்தில் 16 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்


மராட்டியத்தில் 16 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
x
தினத்தந்தி 13 Nov 2020 2:21 AM IST (Updated: 13 Nov 2020 2:21 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 16 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

மும்பை, 

மராட்டியத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 4 ஆயிரத்து 496 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை மாநிலத்தில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 36 ஆயிரத்து 329 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று மட்டும் மாநிலத்தில் புதிதாக 7 ஆயிரத்து 809 பேர் குணமடைந்து உள்ளனா். இதுவரை மாநிலம் முழுவதும் 16 லட்சத்து 5 ஆயிரத்து 64 பேர் குணமாகி ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

122 போ் பலி

தற்போது மராட்டியத்தில் 84 ஆயிரத்து 627 பேர் ஆட்கொல்லி நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் புதிதாக 122 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர்.

இதுவரை 45 ஆயிரத்து 682 பேர் உயிரிழந்து உள்ளனர். மராட்டியத்தில் இதுவரை 96 லட்சத்து 64 ஆயிரத்து 275 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

Next Story