புதுவையில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலி
புதுவையில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் தொற்று பாதிப்பு அதிகரித்தபடி இருந்தது. உயிரிழப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 545 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 69 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 2 பேர் கொரானாவுக்கு பலியாகி உள்ளனர். அதாவது ஜிப்மரில் வெங்கட்டா நகரை சேர்ந்த 58 வயது பெண்ணும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் திருநள்ளாரை சேர்ந்த 82 வயது மூதாட்டியும் பலியாகி உள்ளனர்.
தொடர் சிகிச்சை
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 51 ஆயிரத்து 706 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 883 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 36 ஆயிரத்து 179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 1,071 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 345 பேர் ஆஸ்பத்திரிகளிலும் 726 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 ஆயிரத்து 501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 607 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 498 பேரும், காரைக்காலில் 58 பேரும், ஏனாமில் 44 பேரும், மாகியில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.68 சதவீதமாகவும், குணமடைவது 95.36 சதவீதமாகவும் உள்ளது.
Related Tags :
Next Story