4 மாவட்டங்களில் மட்டும் 100 பேருக்கு மேல் பாதிப்பு தமிழகத்தில் 2,112 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் நேற்று 2,112 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 4 மாவட்டங்களில் மட்டும் 100 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் நேற்று புதிதாக 76 ஆயிரத்து 574 பேரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1,296 ஆண்கள், 816 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 46 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 383 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 565 பேரும், கோவையில் 190 பேரும், செங்கல்பட்டில் 148 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 6 பேரும், பெரம்பலூரில் 5 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 5 லட்சத்து 85 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதில் 7 லட்சத்து 52 ஆயிரத்து 521 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 54 ஆயிரத்து 454 ஆண்களும், 2 லட்சத்து 98 ஆயிரத்து 34 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 33 பேரும் அடங்குவர். அவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட 26 ஆயிரத்து 621 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 94 ஆயிரத்து 536 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
25 பேர் உயிரிழப்பு
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 13 பேரும், தனியார் மருத்துவமனையில் 12 பேரும் என 25 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 6 பேரும், காஞ்சீபுரத்தில் 5 பேரும், மதுரையில் இருவரும், செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பூர், வேலூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 15 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 11 ஆயிரத்து 440 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
2 ஆயிரத்து 347 பேர் ‘டிஸ்சார்ஜ்’
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 347 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் 7 லட்சத்து 22 ஆயிரத்து 686 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 18 ஆயிரத்து 395 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story