செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 148 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 403 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 403 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 43 ஆயிரத்து 853 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 695- ஆக உயர்ந்தது. 855 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 120 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 39 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 37 ஆயிரத்து 711 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 989 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 637 பேர் கொரானா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.
படப்பை
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 27 வயது பெண், 48, 25 வயது ஆண்கள், 68 வயது மூதாட்டி ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 97 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 553-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 599 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்னர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 411- ஆக உயிரிழந்துள்ளது. 543 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story