மும்பையில் புதிதாக 800 பேருக்கு கொரோனா பாதிப்பு
மும்பையில் புதிதாக 800 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று நகரில் புதிதாக 800 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரத்து 404 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 809 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 1, 834 பேர் குணமாகினர்.
மும்பையில் மேலும் 13 ஆண், 4 பெண்கள் என 17 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார். இதுவரை நகரில் வைரஸ் நோய்க்கு 10 ஆயிரத்து 539 பேர் உயிரிழந்து உள்ளனர்.
482 கட்டுப்பாட்டு மண்டலங்கள்
மும்பையில் தொற்று பாதிப்பில் இருந்து 91 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 242 நாட்களாக உள்ளது.
நகரில் தற்போது 482 கட்டுபாட்டு மண்டலங்கள் உள்ளன. 5 ஆயிரத்து 676 கட்டிங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story