வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க டிசம்பர் 15-ந் தேதி வரை அவகாசம் கலெக்டர் தகவல்
அடுத்த மாதம் 15-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க, நீக்க மனுக்களை அளிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021 தொடர்பான ஆலோசனை கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கலெக்டர் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2020-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் நாளை மறுதினம் வெளியிடப்பட உள்ளது. அன்றைய நாள் முதல் அடுத்த மாதம்(டிசம்பர்) 15-ந்தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவுஅலுவலர் மற்றும் வாக்காளர் பதிவுஅலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம்.
சிறப்பு முகாம்கள்
மேலும் வருகிற 21-ந் தேதி, 22-ந் தேதி, அடுத்த மாதம் 12, 13-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்கள் நடைபெறும் நாட்களில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் எல்.இ.டி. வாகனம் மூலம் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்களை கிராமங்கள்தோறும் திரையிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
கல்லூரிகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து ஒவ்வொரு கல்லூரியிலும் வளாகத் தூதுவர்களை நியமித்து, அவர்களை வாட்ஸ்-அப் மூலம் ஒருங்கிணைத்து 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story