போதை பொருள், மதுபாட்டில்கள் விற்பனை செய்த 479 பேர் கைது போலீசார் நடவடிக்கை


போதை பொருள், மதுபாட்டில்கள் விற்பனை செய்த 479 பேர் கைது போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Nov 2020 5:07 PM GMT (Updated: 16 Nov 2020 5:07 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் போதை பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை செய்த 479 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்பார்வையில் போலீசார் நேற்று முன்தினம் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் தடை செய்யப்பட்ட போதை பொரு ட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என பல்வேறு கடைகளில் கண்காணித்தனர்.

இந்த சோதனையில் பல கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி பதுக்கி வைத்து அவர்கள் விற்பனை செய்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல் மதுபாட்டில்களும் ஆங்காங்கே பதுக்கி விற்பனை செய்யப்பட்டது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

479 பேர் கைது

கடந்த 13, 14 ஆகிய நாட்களில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 208 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பல கடைக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த 22 பேரை கைது செய்தனர். மேலும் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக 249 பேரை கைது செய்தனர். நெல்லை மாவட்டத்தில் 479 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,424 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story