கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை 1 கோடியை நெருங்கியது 23 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை


கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை 1 கோடியை நெருங்கியது 23 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை
x
தினத்தந்தி 18 Nov 2020 4:45 AM IST (Updated: 18 Nov 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை 1 கோடியை நெருங்கியுள்ளது. 23 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை. நேற்று 1,336 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 62 ஆயிரத்து 804 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 1,336 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 64 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 16 பேர் பலியாகியுள்ளனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 557 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 24 பேர், பல்லாரியில் 15 பேர், பெலகாவியில் 9 பேர், பெங்களூரு புறநகரில் 40 பேர், பெங்களூரு நகரில் 729 பேர், பீதரில் 17 பேர், சாம்ராஜ்நகரில் 7 பேர், சிக்பள்ளாப்பூரில் 21 பேர், சிக்கமகளூருவில் 29 பேர், சித்ரதுர்காவில் 13 பேர், தட்சிண கன்னடாவில் 30 பேர், தாவணகெரேயில் 24 பேர், தார்வாரில் 5 பேர், கதக்கில் 3 பேர், ஹாசனில் 30 பேர், ஹாவேரியில் 4 பேர், கலபுரகியில் 14 பேர், குடகில் 8 பேர், கோலாரில் 9 பேர், கொப்பலில் 17 பேர், மண்டியாவில் 38 பேர், மைசூருவில் 52 பேர், ராய்ச்சூரில் 14 பேர், ராமநகரில் 9 பேர், சிவமொக்காவில் 11 பேர், துமகூருவில் 89 பேர், உடுப்பியில் 21 பேர், உத்தரகன்னடாவில் 32 பேர், விஜயாப்புராவில் 16 பேர், யாதகிரியில் 6 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பரிசோதனை எண்ணிக்கை

பெங்களூரு நகரில் 9 பேர், பல்லாரி, தார்வார், ராய்ச்சூர், துமகூரு, உத்தரகன்னடாவில் தலா ஒருவர், தட்சிண கன்னடாவில் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 75 ஆயிரத்து 384 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 96 லட்சத்து 44 ஆயிரத்து 9 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2,100 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரத்து 241 பேர் குணம் அடைந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 693 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவவாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியுள்ளது. நேற்று 23 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story