ஏ.டி.எம்.மில் நிரப்ப வேண்டிய ரூ.4¼ கோடியுடன் தப்பிஓடிய டிரைவர் உள்பட 3 பேர் கைது
ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப வேண்டிய ரூ.4¼ கோடியுடன் தப்பிஓடிய வேன் டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
பால்கர் மாவட்டம் விரார், பொலிஜ் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப தனியார் நிறுவன ஊழியர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு சென்று இருந்தனர்.
இதில் ஊழியர்கள் மற்றும் காவலாளி ஏ.டி.எம்.யில் பணம் நிரப்ப சென்றபோது, வேனில் இருந்த ரூ.4¼ கோடியுடன் டிரைவர் தப்பிஓடினார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பணத்துடன் தப்பிஓடிய டிரைவரை வலைவீசி தேடிவந்தனர்.
இதில் போலீசார் கல்யாண் பாட்டா பகுதியில் அனாதையாக நிறுத்தப்பட்டு இருந்த பணத்துடன் கடத்தி செல்லப்பட்ட வேனை மீட்டனர். மேலும் வேனில் இருந்து ரூ.2 கோடியே 30 லட்சம் மீட்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அகமதுநகருக்கு தப்பிஓடிய வேன் டிரைவர் ரோகித் பாபன் அரு (வயது26) மற்றும் அவரது கூட்டாளிகள் அக்சய் பிரபாகர் (24), சந்திரகாந்த் என்ற பாபுஷா குலாப் கெய்க்வாட்டை (41) கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் ஏ.டி.எம். வேன் மற்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.4 கோடியே 22 லட்சத்தை பறிமுதல் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story