தொழிலாளி சாவு தொழிற்சாலையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்


தொழிலாளி சாவு தொழிற்சாலையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2020 5:28 AM GMT (Updated: 19 Nov 2020 5:28 AM GMT)

தொழிலாளி இறந்ததையடுத்து அவரது உறவினர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம், 

விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மணிகண்டன் (வயது 31). இவர் மதுராந்தகத்தை அடுத்த வையாவூரில் உள்ள தனியார் மதுபான ஆலைக்கு அட்டை பெட்டிகள் தயாரிக்கும் கம்பெனியில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு அவர் தொழிற்சாலைக்குள் மயங்கி விழுந்தார். அவரை ஊழியர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது மனைவி ஈஸ்வரி படாளம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டனின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இறந்த மணிகண்டனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Next Story