திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்


திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்
x
தினத்தந்தி 19 Nov 2020 5:47 PM GMT (Updated: 19 Nov 2020 5:47 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவையொட்டி மாவட்டத்தில் 22 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இன்றும், நாளையும் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மண்டபங்களில் தங்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை திருச்செந்தூரில் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விடுதிகளில் தங்க தடை

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, திருச்செந்தூர் கோவிலில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்க

ளுக்கு அனுமதி கிடையாது. மேலும் விடுதிகள், மண்டபங்களில் வெளியூர் பக்தர்கள் தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு தங்கியுள்ள பக்தர்கள் வெளியேற ஒத்துழைக்க வேண்டும்.

கொரோனா பரவல் 2-வது அலை உருவாகும் வாய்ப்பு உள்ளதால், அரசின் நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

கோவிலில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் யு-டியூப் இணையதளத்தில் பக்தர்கள் நேரலையில் கண்டு சாமி தரிசனம் செய்யலாம்.

சூரசம்ஹாரம், திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, திருச்செந்தூரில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை. திருச்செந்தூரில் 7 இடங்களிலும், மாவட்ட எல்லைகளில் 15 இடங்களிலும் என மொத்தம் 22 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூருக்கு வரும் வெளியூர் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story