வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் சார்பில் 26-ந்தேதி முழுஅடைப்பு


வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் சார்பில் 26-ந்தேதி முழுஅடைப்பு
x
தினத்தந்தி 19 Nov 2020 11:46 PM GMT (Updated: 19 Nov 2020 11:46 PM GMT)

புதுவையில் வருகிற 26-ந்தேதி நடைபெறும் முழுஅடைப்புக்கு ஆதரவு தரவேண்டுமென தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

புதுச்சேரி, 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின்சார வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது, பொருளாதார பாதிப்பு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது, பஞ்சாலைகளை மூடுவது ஆகியவற்றை கண்டித்தும் நாடு முழுவதும் வருகிற 26-ந்தேதி தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேநாளில் புதுவையில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

ஒத்துழைப்பு தரவேண்டும்

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் ஞானசேகரன், சி.ஐ.டி.யு. புதுவை பிரதேச செயலாளர் சீனுவாசன், ஏ.ஐ.சி.சி.டி.யு. பொதுச்செயலாளர் புருஷோத்தமன், எம்.எல்.எப். செயலாளர் வேணுகோபால், அரசு ஊழியர் சம்மேளன தலைவர் பிரேமதாசன், ஏ.ஐ.யு.டி.யு.சி. செயலாளர் சிவக்குமார், புதுவை ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி உரிமையாளர்கள், போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் மற்றும் இதர பிரிவினர் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Next Story