அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2020 8:03 AM IST (Updated: 20 Nov 2020 8:03 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கீழவலம் கங்கை அமரன் தலைமை தாங்கினார்.

அச்சரப்பாக்கம், 

அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் விவேகானந்தன் வரவேற்றார். கூட்டத்தில் தமிழக அமைச்சரும் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும் செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான பாண்டியராஜன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளர் அஸ்பையர் சாமிநாதன், முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2021 பொதுத்தேர்தலில் செங்கல்பட்டு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உள்பட பல்வேறு அ.தி.மு.க. அணி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார். முடிவில் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

Next Story