மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை + "||" + Near Kallakurichi School student Suicide by drinking poison

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகள் அனு என்கிற நிஷாந்தினி (வயது 15). இவர் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனாவால் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நிஷாந்தினியிடம் வீட்டுவேலை செய்யாமல் ஏன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய் என கேட்டு அண்ணாமலை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நிஷாந்தினியை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிஷாந்தினியின் தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சி அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறால் 2 குழந்தைகளுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
2. கள்ளக்குறிச்சி அருகே குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் - சொத்துக்காக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கை கைது
கள்ளக்குறிச்சி அருகே குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்காக அக்காளையும், அவரது குழந்தையையும் கொலை செய்து நாடகமாடிய தங்கையை போலீசார் கைதுசெய்தனர்.
3. கள்ளக்குறிச்சி அருகே விஷம் கொடுத்து மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி
கள்ளக்குறிச்சி அருகே விஷம் கொடுத்து மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. கள்ளக்குறிச்சி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.