அம்பர்நாத் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பரின் மனைவியுடன் வாலிபர் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை


அம்பர்நாத் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பரின் மனைவியுடன் வாலிபர் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 21 Nov 2020 3:15 AM IST (Updated: 21 Nov 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

அம்பர்நாத் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பரின் மனைவியுடன், வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தானே, 

தானே மாவட்டம் அம்பர்நாத் டவுண் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குறிப்பிட்ட வீட்டை திறந்து சோதனை செய்தனர்.

இதில் அங்கு உடல் அழுகிய நிலையில் ஆணும், பெண்ணும் பிணமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நண்பரின் மனைவி

பின்னர் நடத்திய விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர்கள் சந்தீப் செக்சேனா(வயது33) மற்றும் ஜெயந்தி ஷா(36) என்பது தெரியவந்தது.

ஜெயந்தி ஷா, சந்தீப் செக்சேனாவுடன் அம்பர்நாத் எம்.ஐ.டி.சி. தொழிற்பேட்டையில் பணிபுரியும் நண்பரின் மனைவி என்பதும், கடந்த 17-ந் தேதி முதல் ஜெயந்தி ஷாவை காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரணத்திற்கான சரியான் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் இதுகுறித்து உறுதியான தகவல் வெளிவரும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story