புதுவையில் மேலும் 54 பேருக்கு கொரோனா


புதுவையில் மேலும் 54 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Nov 2020 11:13 PM GMT (Updated: 20 Nov 2020 11:13 PM GMT)

புதுவையில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

புதுவையில் தொற்று பாதிப்பு தொடக்கத்தில் மிகவும் குறைவாக இருந்து வந்தது. இந்தநிலையில் அடுத்தடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து கொரோனா பரவல் அதிகரித்தது. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதுப்புது உச்சத்தை தொட்டது. உயிர்ப் பலியும் இருந்து வந்தது.

இந்தநிலையில் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக தொற்று பாதிப்பு குறைந்தது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 468 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 101 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 73 ஆயிரத்து 826 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 979 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 36 ஆயிரத்து 585 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

96.64 சதவீதம் பேர் குணம்

அவர்களில் 248 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 373 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக 621 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 35 ஆயிரத்து 355 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 609 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 499 பேர் புதுச்சேரியையும், 59 பேர் காரைக்காலையும், 44 பேர் ஏனாமையும், 7 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவையில் உயிரிழப்பு 1.66 சதவீதமாகவும், குணமடைவது 96.64 சதவீதமாகவும் உள்ளது. 

Next Story