உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிக்கல்,
சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை திருக்குவளையில் உள்ள கருணாநிதி இல்லத்தில் இருந்து தொடங்குவதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருக் குவளைக்கு வந்தார். தொடர்ந்து அவர் நிருபர்களை சந்தித்து விட்டு, பிரசாரத்தை தொடங்குவதற்காக மேடையில் ஏறி பேசினார். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுக்கூட்டத் திற்கு அனுமதி இல்லை எனக்கூறி உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப் பட்டதை கண்டித்து நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்கல் கடைத்தெரு பகுதியில். நாகை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சிக்கல் ஆனந்த் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகை- திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
இதேபோல நாகையை அடுத்த நாகூர் புதிய பஸ் நிலையத்தில் நாகூர் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. விரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திட்டச்சேரி பஸ் நிலையம் அருகில் பேரூர் கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் உதயநிதி ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்ட தகவல் அறிந்தவுடன் தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வேதாரண்யம் தாலுகா செம்போடையில் தி.மு.க. வினர் 1,000-த்திற்கும் மேற்பட் டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.வேதரத்தினம் தலைமை தாங்கினார்.
கள்ளிமேடு கோவில்பத்து, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதியில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை, தலைஞாயிறு, வேளாங் கண்ணி உள்பட 9 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story