அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்


அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்
x
தினத்தந்தி 22 Nov 2020 2:05 PM IST (Updated: 22 Nov 2020 2:05 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் வாக் காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் நடந்தது.

அரியலூர்,

இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுரைப்படி, 1.1.2021-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வ தற்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான முதற்கட்ட வாக் காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங் களில் நேற்று நடந்தது.

இன்றும் நடக்கிறது

இந்த முகாமில், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக் காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் மற்றும் ஏராள மானவர்கள் வரைவு வாக் காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் உள் ளிட்ட வைக்கும் விண்ணப் பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர். முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச் சாவடி நிலை முகவர்கள் உதவி புரிந்தனர்.

விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப் பட்டு அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. இதே போல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் 12, 13-ந் தேதிகளிலும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story