புதுச்சேரியில் இன்று 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


புதுச்சேரியில் இன்று 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 22 Nov 2020 12:45 PM GMT (Updated: 22 Nov 2020 12:45 PM GMT)

புதுச்சேரியில் இன்று புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,693 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை 35,525 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 609 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 559 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக, புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story