தூத்துக்குடியில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் 100 பேர் கைது


தூத்துக்குடியில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் 100 பேர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2020 10:36 PM IST (Updated: 23 Nov 2020 10:36 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை சாலைமறியல் போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி, 

தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் இளைஞர் அணி மதியழகன், ஆனந்த் கேபிரியேல்ராஜ், பொறியாளர் அணி அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வடபாகம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர்.

இதே போன்று தாளமுத்துநகர் டேவிஸ்புரம் பகுதியில் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜோதிராஜா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற 14 பெண்கள் உள்பட 86 பேரை தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர்.

Next Story