மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி வினியோகத்துக்காக குழு அமைப்பு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல்


மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி வினியோகத்துக்காக குழு அமைப்பு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2020 3:37 AM IST (Updated: 25 Nov 2020 3:37 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி வினியோகத்துக்காக குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

மும்பை, 

கொரோனா நிலவரம் குறித்து டெல்லி, மராட்டியம், மேற்குவங்கம், குஜராத், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநில முதல்-மந்திரிகளுடன் நேற்று காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனிகா மருந்து நிறுவனங்கள் இணைந்து கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. இந்த தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது. சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூணவாலாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருக்கிறேன்.

குழு அமைப்பு

தடுப்பூசி வினியோகத்துக்கு அவசரகால அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்போது அதனை உடனடியாக பெற்று மராட்டியத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதற்காக தடுப்பூசி வழங்குதலை ஒருங்கிணைக்க மராட்டியத்தில் செயல்பாட்டு குழுவை அமைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story