வீரபாண்டி மேற்கு ஒன்றியத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்
வீரபாண்டி மேற்கு ஒன்றியத்தில் உள்ள வேம்படிதாளம், ஆனைகுட்டப்பட்டி, கல்பாரப்பட்டி, சீரகாபாடி, சேனை பாளையம், ராக்கி பட்டி, கடத்தூர் அக்ரஹாரம் ஆகிய ஊராட்சிகளில் அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றது.
ஆட்டையாம்பட்டி,
வீரபாண்டி மேற்கு ஒன்றியத்தில் உள்ள வேம்படிதாளம், ஆனைகுட்டப்பட்டி, கல்பாரப்பட்டி, சீரகாபாடி, சேனை பாளையம், ராக்கி பட்டி, கடத்தூர் அக்ரஹாரம் ஆகிய ஊராட்சிகளில் அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு மனோன்மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வீரபாண்டி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான எஸ்.வரதராஜ், மாணவரணி மாவட்ட செயலாளர் தமிழ்மணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் துணைத் தலைவருமான வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர்கள் மாதேஸ்வரன், பழனிசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் அரியானூர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேம்படி தாளத்தில் நடந்த கூட்டத்தில், கட்சியின் ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் சீனிவாசன், கூட்டுறவு சங்கத் தலைவர் சதாசிவம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், மீனவர் அணி செயலாளர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி பார்த்தசாரதி, வேம்படிதாளம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி ரவிச்சந்திரன், கல் பாரப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் நடராஜன் உள்பட இளைஞர், இளம் பெண்கள், பாசறை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வீரபாண்டி மேற்கு ஒன்றிய பாசறை செயலாளர் செல்லாண்டி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story