மாவட்டத்தில் 1,000 நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 1,000 நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கும் திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு 1,000 நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பயனாளிகள், அவர்கள் குடியிருப்பிற்கு அருகாமையில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பெற்று பயன்பெறலாம்.
ஒரு கோழி குஞ்சு ரூ.30 வீதம் 1,000 கோழிக்குஞ்சுகளுக்கான கொள்முதல் தொகை ரூ.30 ஆயிரம் ஆகும். இதில் 50 சதவீத மானியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதேபோல் தீவனம் கொள்முதல் செய்ய மானியமாக ரூ.22 ஆயிரத்து 500-ம், குஞ்சு பொரிப்பான் ஒன்றிற்கான கொள்முதல் தொகை ரூ.75 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமாக ரூ.37 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது.
2,500 சதுரஅடி நிலம்
பயனாளி கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். 1,000 கோழிகளுக்கு இருப்பிட வசதி இருக்க வேண்டும்.
அதாவது 2,500 சதுர அடி நிலம்் ஒரே இடத்தில் உள்ளவராக இருக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட கிராம ஊராட்சியில் பயனாளி நிரந்தர குடியிருப்பு உள்ளவராக இருக்க வேண்டும்.
கணவனை இழந்த கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு கோழிப்பண்ணையை நிலைநிறுத்தி வெற்றிகரமாக நடத்துபவராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story