கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம்


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 30 Nov 2020 4:25 AM IST (Updated: 30 Nov 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் கணக்க விநாயகருக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் மற்றும் பிரகதீஸ்வரருக்கு 108 லிட்டர் பால் அபிஷேகமும், பிரகன்நாயகி அம்பாளுக்கு 16 வகையான வாசனை திரவியங்களுடன் கூடிய மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

மேலும் மாலை 6 மணியளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோவிலுக்கு பக்தர்கள் முக கவசம் அணிந்து வந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

108 வலம்புரி சங்குகள்...

இதேபோல் உடையார்பாளையத்தை அடுத்த காமரசவள்ளி கிராமத்தில் கார்கோடிஸ்வரர்- பாலாம்பிகை தாயார் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கார்கோடிஸ்வரர்- பாலாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும் 108 வலம்புரி சங்குகளை லிங்க வடிவில் அழகாக அடுக்கி வைத்து, ஒவ்வொரு சங்கிலும் பூக்கள் வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. யாகமும் வளர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கார்கோடிஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story