ராமநாதபுரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் முன்னிலையில் நடந்தது


ராமநாதபுரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் முன்னிலையில் நடந்தது
x
தினத்தந்தி 30 Nov 2020 10:30 AM IST (Updated: 30 Nov 2020 10:30 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் சமூக நலத்துறை ஆணையர் ஆபிரஹாம் தலைமையில், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,369 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 302 வாக்குச்சாவடி மையங்களும், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 346 வாக்குச்சாவடி மையங்களும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 336 வாக்குச்சாவடி மையங்களும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 385 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. கடந்த 21, 22 தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல் -14320, நீக்கல்-2080, பிழை திருத்தம்-1820, ஒரே தொகுதி -906 ஆக மொத்தம் 1,9126 படிவங்கள் பெறப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்

மேற்படி சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், அலுவலக தேர்தல் பிரிவில் கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு முகாமில் பெறப்பட்ட படிவங்களை இணையத்தில் பதிவு செய்வதை வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், கலெக்டரும் பார்வையிட்டு நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோபு, பரமக்குடி ஆர்.டி.ஓ.தங்கவேல் மற்றும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story