மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கணவர், மாமனார், மாமியார் கைது + "||" + Near Kanchipuram, Young woman commits suicide by hanging - Husband, father-in-law, mother-in-law arrested

காஞ்சீபுரம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கணவர், மாமனார், மாமியார் கைது

காஞ்சீபுரம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கணவர், மாமனார், மாமியார் கைது
காஞ்சீபுரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த புத்தேரி பெரிய மேட்டு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாலா (20) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை என்று வீட்டில் மாமனார், மாமியார், கணவர் ஆகியோர் மாலாவை தொடர்ந்து திட்டி வந்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மாலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை தலைமையில் காஞ்சீபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் மைனர்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் அவரது கணவர் மணிகண்டன், மாமனார் முருகன் (65), மாமியார் சாந்தி (55) ஆகியோர் மாலாவை தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவர்கள் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி வித்யா விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. நங்கவள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
2. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பல்லடம் அருகே குடும்பத்தகராறில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
3. திருவள்ளூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. குழந்தை இல்லாத ஏக்கத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.