அரியலூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி


அரியலூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி
x
தினத்தந்தி 3 Dec 2020 4:36 AM IST (Updated: 3 Dec 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதனை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.

அரியலூர்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி, கட்டுப்பாட்டு கருவி ஆகியவைகளை முதற்கட்ட சரிபார்க்கும் பணியானது அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.

இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டரும், மாவடட தேர்தல் அதிகாரியுமான ரத்னா பார்வையிட்டார். அப்போது இருப்பு வைக்கப்பட்ட 797 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 787 கட்டுப்பாட்டு கருவி, 837 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளை சரிபார்க்கும் பணியினை, பெங்களூரு பாரத் மின்னணு லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த 11 பொறியாளர்கள் மேற்கொண்டனர். முதற்கட்ட சரிபார்க்கும் பணியினை கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

போலீஸ் சூப்பிரண்டு

ஆய்வின்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனி்வாசன், வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாலாஜி, தாசில்தார் (தேர்தல்) குமரய்யா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story