ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.
ஜெயங்கொண்டம்,
விவசாய சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து அந்த கட்சியினர், நான்கு ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களை கைது செய்ய தயார் நிலையில் இருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராஜன், துரைராஜ், தா.பழூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்பட கட்சியினர் 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story