வீட்டிற்குள் இறந்து கிடந்த துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்
வீட்டிற்குள் இறந்து கிடந்த துப்பாக்கி தொழிற்சாலை ஊழியரின் உடலை கைப்பற்றி நவல்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவெறும்பூர்,
கேரள மாநிலம் ஒட்டப்பாலம் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன்(வயது 56). இவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் தங்கி துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் கேரளாவில் வசித்து வருகிறார்கள். கடந்த 1-ந் தேதி இரவு பணிக்கு வந்துவிட்டு வீடு திரும்பிய முரளிதரன் அதன்பின்னர் வேலைக்கு வரவில்லை. இதனால் அவருடைய நண்பர் விஜயகுமார் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர் செல்போனை எடுக்காததால், விஜயகுமார் நேற்று மதியம் முரளிதரனின் வீட்டிற்கு சென்றார். அங்கு வீடு உள்புறமாக பூட்டியிருந்தது.
இறந்து கிடந்தார்
இதனால் சந்தேகம் அடைந்த அவர் இதுபற்றி நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, முரளிதரன் உடல் அசைவற்று கிடந்துள்ளார். உடனே போலீசார் அவரை அருகில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 மணி நேரத்துக்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து முரளிதரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் கேரளாவில் உள்ள அவருடைய மனைவிக்கும் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து நவல்பட்டு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story