வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மோடி உருவபொம்மையை எரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி வேளாங்கண்ணி அருகே மேலபிடாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மோடி உருவபொம்மையை எரித்தனர். நாகையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி,
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ந் தேதி முதல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகை மாலி தலைமை தாங்கினார்.
இதில் விவசாய சங்க மாநில தலைவர் சுப்ரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகையன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சித்தார்த்தன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட இணை செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
உருவபொம்மை எரிப்பு
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்து கீழையூரில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர் பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.
நாகை தலைமை தபால் நிலையத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பகு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சரபோஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.
75 பேர் கைது
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடி கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சந்திரசேகர், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்தையன், மாவட்ட குழு உறுப்பினர் அபூபக்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story