காரைக்குடி, மானாமதுரையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி
காரைக்குடி, மானாமதுரையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
காரைக்குடி
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி காரைக்குடி 5 விளக்கு அருகில் அவரது உருவப் படத்திற்கு அ.தி.மு.க. நகரச்செயலாளர் சோ.மெய்யப்பன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் ராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கோவிந்தன், வக்கீல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜூ, மாவட்ட இலக்கிய அணி தலைவர் சின்னதுரை, நகர துணைச்செயலாளர்கள் ராஜேந்திரன், ஆனந்தி, நகர இளைஞரணி செயலாளர் இயல்தாகூர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் தேவன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் சிதம்பரம், தட்சிணாமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, சேதுபதி, சண்முகமணி, மகளிர் அணியை சேர்ந்த ராமாமிர்தம், சுலோச்சனா, சோபியா பிளாரன்ஸ், லலிதா, தமிழ்க்கொடி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி
செலுத்தினர்.
மானாமதுரை
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் மானாமதுரை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு நாகராஜன் எம்.எல்.ஏ. மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் சண்முக நாதன், கணேசன், சோமத்துர் சந்திரன், நமச்சிவாயம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போல் மானாமதுரை வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் சிவ சிவ ஸ்ரீதரன் தலைமையில் பச்சேரி ஊராட்சி மன்ற கிளையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பத்தூர்
ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி திருப்பத்தூர் காந்தி சிலை அருகே அவரது உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜ் தலைமையில் அ.தி.மு.க.வினர் காந்தி சிலையில் இருந்து மதுரை ரோடு வழியாக அண்ணாசிலை வரை மவுன ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு மவுன அஞ்சலி செலுத்தி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர்.
இதில் ஆவின் சேர்மனும், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கே.ஆர்.அசோகன், அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், ஒன்றிய செயலாளர்கள் சிவமணி, வடிவேல், நகர செயலாளர் இப்ரம்ஷா, ஜெயலலிதாபேரவை ஒன்றிய செயலாளர் புதுத்தெரு முருகேசன், மாவட்ட பிரதிநிதி சிவா, முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் பத்மநாபன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, காந்தி, ஆத்தங்கரைபட்டி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சிங்கம்புணரி 4 ரோடு சந்திப்பில் இருந்து மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி அ.தி.மு.க. வினர் ஊர்வலமாக பஸ் நிலையத்தை நோக்கி சென்றார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசு தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் திருவாசகம் முன்னிலை வகித்தார். பஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரபு ஜெயலலிதா
உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகன், ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு மற்றும் நகர துணைத்தலைவர் குணசேகரன், தொழில்நுட்ப பிரிவு வடக்கு ஒன்றிய செயலாளர் அஸ்விந்த், துணை செயலாளர் பொன் விஜயன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் சேவுகமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் மாது (எ) இளங்குமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் சுவேந்திரன் ஜெயங்கொண்ட நிலை வினோத் கன்னா, முத்தன், பேரவை ரவி, ஜெயந்தன், காளாப்பூர் சசிகுமார், சேவுகப்பெருமாள், கிருங்காக்கோட்டை ஸ்டாலின், மயிலன், கக்கன் ராஜா, புருஷோத்தமன், பொன் பாலாஜி, வையாபுரிபட்டி வீரையா, தேசிங்கு, சேகரன், சேகர், மணப்பட்டி பிரபு சிவபுரிபட்டி பீமன், அரசினம்பட்டி முத்துராமன், மகளிர் அணி நித்யா, தவச் செல்வி, சுந்தரி, சாந்தி, ரேவதி, மருதிப்பட்டி வெங்கடேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மணப்பட்டி
அதேபோல் சிங்கம்புணரியை அடுத்த மணப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின்உருவப்படத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story