விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2020 10:59 AM IST (Updated: 6 Dec 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கள்ளக்குறிசசி, சங்கராபுரத்தில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதில் எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கள்ளக்குறிச்சி,

தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் செல்வநாயகம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுப்ராயலு வரவேற்றார். டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதனை திரும்பப் பெறக்கோரியும் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க.வினர் கருப்பு கொடிகளை கையில் ஏந்தி மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டத்தை திரும்பபெறக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதில் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கென்னடி, சண்முகம், லியாகத்அலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகரநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், வசந்தவேல், அரவிந்தன், நகர பொறுப்பாளர் சிதம்பரம், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கமருதீன், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் துரைதாகபிள்ளை வரவேற்றார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண்திருத்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும், டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் தயாளமூர்த்தி, கிருஷ்ணன், சின்னதம்பி, செந்தில்குமார், டேனியல், விஜயகுமார், ஜெயந்தி பாலஅண்ணாமலை, தயாளன், முருகன், சீனு, ரவி, கோவிந்தன், செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story