டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 164 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 5-ந் தேதி (அதாவது நேற்று) மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில குழு குளோப் தலைமையில் நேற்று காலை கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஒன்று திரண்டனர். இதையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக கடலூர் புதுநகர் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து காலை 10.30 மணி அளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபடுவதற்காக மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து மறியலில் ஈடுபடக்கூடாது என்று கூறினர். இதனால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட குழு மாயவன், மாவட்ட செயலாளர் துரை, வட்ட துணைச்செயலாளர் சுந்தர் ராஜா, வட்டக்குழு நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 30 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திட்டக்குடி-ஸ்ரீமுஷ்ணம்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி தபால் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் சின்னதுரை தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 17 பேரை கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட மாவட்ட இளைஞர் பெருமன்ற தலைவர் சசிகுமார் உள்பட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் கச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மணிவாசகம், வட்ட செயலாளர் முருகவேல், சுப்பிரமணியன் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிதம்பரம் மேலவீதி கஞ்சி தொட்டி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகர செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சித்ரா, குமாரி, அர்ச்சுனன், வேல்வேந்தன், குமார், அறிவழகன், ரகுமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 33 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் விருத்தாசலம் கடைவீதி, தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி விருத்தாசலம் வட்டக் குழு சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வட்ட செயலாளர் ராவணராஜன், மாவட்ட நிர்வாக குழு பட்டுசாமி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அறிவழகி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் விஜய பாண்டியன், மாவட்டக்குழு வேல்முருகன் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் பண்ருட்டி தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் ஈடுபட்ட வட்ட செயலாளர் மதியழகன், மாவட்ட செயலாளர் துரை, நகர செயலாளர் சக்திவேல், பொருளாளர் முருகன், மாவட்ட குழு லாரன்ஸ், வட்ட துணை செயலாளர் வெங்கடேசன், விவசாய சங்க தலைவர் ஆறுமுகம், வட்டக்குழு ராமச்சந்திரன், பலராமன், சசிகுமார், சிவகுமார் குணசேகர், மோகன் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story